Saturday, April 24, 2010

என் (நம்) நண்பனுக்காக எழுதி முடிக்கப்பட வேண்டிய கடிதம்,... - 3 -



நான் என்றும் மரியாதை செலுத்த வேண்டும் என்று நினைத்த திரு. வைரவேலு அவர்களுக்கும், திருமதி. யமுனாதேவி அவர்களுக்கும் எனது வணக்கங்கள்!
இந்த வரிகளை படிக்கும் போது உடனே உங்கள் மனதிருக்குள் தோன்றும் அந்த கேள்வி எனக்கு கேட்கிறது. ஆம், இந்த கடிதத்தை எழுதியது யார்? இது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான கேள்வி கிடையாது. உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து அறைகளும், உங்கள் வீட்டு மாடிபடிகளும் எனது பெயரை அழகாக எடுத்து சொல்லும். இந்த நேரம் யூகித்து இருப்பிர்கள் எனது பெயரை. ஆம் உங்கள் வாழ்கையில் நீங்கள் மிகவும் வெறுக்கும் நபராக இந்நேரம் உங்கள் மனதில் இருப்பவன் இந்த பிரசாந்தாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

முதலில் உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். எதற்கு என்று புரியவில்லையா, உங்களக்கு சில விஷயங்கள் என்றுமே புரியாததின் விளைவுதான் இந்த கடிதம். நீங்கள் மிகவும் சீரும், சிறப்புமாக வளர்த்த குழந்தைக்கு உலகமே வியக்கும் படி திருமணம் செய்து வைதிர்களே அதற்குதான் எனது வாழ்த்துகள். ஆம், திவ்யா எனக்கு என்றுமே குழந்தைதான். அந்த அழகிய  குழந்தை தட்டுதடுமாறி இந்த உலகத்தை வெல்ல நினைத்த வேளையில் அதன் குழந்தைதனத்தையும், அதன் ஆசைகளையும் பொசுக்கி தள்ளியே உங்களுக்கு எனது வாழ்த்துகள். 
இதை பற்றி பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது என்று கேட்கிறிர்களா? எனக்கு இல்லாத அருகதை, அதுவும் திவ்யாவின் மேல் உள்ள அக்கறை இந்த உலகத்தில் வேறு எவனுக்கு இருக்கிறது. அதன் காரணமாகதான் இந்த கடிதம். சரி, திருமணம் ஆகி கிட்டதட்ட 6 மாதங்கள் முடிந்த பிறகு இந்த கடிதத்தை உங்களக்கு எழுதுவதன் நோக்கம் புரியவில்லையா?. இவ்வளவு நாள் என் மனதில் இருந்த காயங்கள், வழிகள், சோகம் அழுகை, கண்ணீர், கோபம் என்ற அனைத்தும் சிறிது காலத்தில் குறையும் என்று என் மனதின் உள்ளே அடக்கி வைத்திருந்தேன். ஆனால் காலங்கள் ஓடினாலும் எனது கோபம் இன்னும் அதிகம் ஆகி கொண்டுதான் போகிறதே தவிரே குறையவில்லை. அதை குறைக்கும் நோக்கத்தில்தான் இந்த கடிதத்தின் வாயிலாக நானும், திவ்யாவும் உங்கள் இருவரிடமும் எங்கள் காதலை உங்களிடம் வெளிபடுத்தும் போது கேட்க நினைத்த அனைத்தையும் இப்போது கேட்க போகிறேன். என்ன இப்போது திவ்யா என்னுடன் இல்லை, அவ்வளவுதான். இந்த எந்தவொரு கேள்விக்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, அந்த பதில்கள் எனக்கு தேவையும் இல்லை. 


அடடா! உடனே நீங்கள் இந்த கேள்வியை கேட்பிர்கள் என்று எனக்கு நன்கு தெரியும். "உன்னை எவ்வளவு நம்பினோம், ஆனால் நீ எங்களக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டாய்".  ஹ்ம். . நான் நம்பிக்கை துரோகம் செய்து விட்டேனா? எது நம்பிக்கை துரோகம்? 


01 . நாங்கள் இருவரும் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைத்து தான் என்னை உங்கள் வீட்டிலும், திவ்யாவை எங்கள் வீட்டிலும் அனுமதிதிர்கள். அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நடுநிலமையான கல்லூரியில் படித்தாலும், ஒரு வகுப்பில் கிட்டதட்ட 70 பேர் இருந்தும், 4 வருட பொறியியல் படிப்பில் எந்தவொரு முறையும், அரியர்ஸ் வைக்காமல், அனைத்து முறையும் Distinction 'இல் தேர்வான 5 - 6 நபர்களில் உங்கள் திவ்யாவும், நானும் இருந்து இருக்கிறோம். இந்த விசயத்தில் உங்கள் நம்பிக்கையில் நாங்கள் குறை வைக்கவில்லை.

02 . ஒரு குழந்தை பிறந்து, வளரும் போது அதன் பெற்றோர்கள் அவர்கள் மீது வைக்கும் ஆசையும் சரி, நம்பிக்கையும் சரி என்ன தெரியுமா? நமது குழந்தை நன்கு படித்து, நல்ல வேலையில் சேர்ந்து கை நிறைய சம்பாரிக்க வேண்டும் என்பதே. அந்த நம்பிக்கையை மெய்படுத்துவது போல் அரியர்ஸ் வைக்காமல், அனைத்து முறையும் Distinction 'இல் தேர்வான இந்த பிரசாந்த்தும், திவ்யாவும் தங்கள் கல்லூரிக்கு வந்த முறையே முதலாவது, மட்டும்  இரண்டாவது  மென்பொருள் கம்பெனியில் தேர்வாகி 5 எண் இலக்கத்தில் சம்பளம் பெற்றோம். இதிலும் உங்கள் நம்பிக்கைக்கு நாங்கள் குறை வைத்து விட வில்லை. 

இன்னும், இன்னும் என்னால் சொல்ல முடியும் ஆனால் அதை உங்களிடம் கூறி புரிய வைக்க இன்னும் யூகங்கள் ஆகும். உங்களக்கு என் மீது வெறுப்பு இருந்திருந்தால் என்னிடம் கண்டிப்பாக நீங்கள் பாசத்தையும், அன்பையும் பொழிந்திருக்க மாட்டிர்கள். என் திவ்யாவை நீங்கள் திருமணதிருக்கு கட்டாய படுத்திய சமயத்தில் அவள் என்னை பற்றியும், எங்கள் காதலை பற்றி கூறிய வேளையில் நீங்கள் முடியாது என சொல்லி வைத்த காரணம் இருக்கிறதே என்னை மிகவும் வேதனை படுத்தியது.  "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாரதி பாடிய வார்த்தைகள் வெறும் பள்ளி புத்தகத்தில் மட்டும் தானே சரி என்ற உங்கள் வாதத்தின் முன்பு எப்படி எங்களது காதல்  திவ்யாவின் வாழ்கை புத்தகத்தில் படியும். உலகம் எங்கேயோ போய் கொண்டிருக்கும் இந்த வேளையில் உங்களது வாதம் பிற்போக்காக இருந்தாலும், திவ்யாவின் பிடிவாதம் உங்களை முற்போக்காக மாற்றாததின் காரணம் என்னவோ?   ஒருவேளை நீங்கள் இதுவரை பார்த்த காதலர்களில் இருந்து நாங்கள் மிகவும் வேறுபட்டு இருந்தோமே அதுவா? இல்லை, உங்கள் அனைத்து ஆசைகளையும் நினைவாக்கினோமே அதுவா ? இல்லை எங்களை பற்றியும், எங்களது காதலை பற்றியும் உங்களக்கு கடைசி வரையில் தெரியாமல் இருந்ததே அதுவா? இதோ எங்களது காதலின் காதல் பற்றியும், இதுவரை நீங்கள் கேட்டிராத சம்பவங்கள் பற்றியும் உங்களக்கு எடுத்து கூறும் நேரம் வந்து விட்டது. இதோ எங்களை பற்றி, நீங்கள் இதுவரை அறியாத திவ்யா, பிரசாந்தை பற்றி . . . 
(தொடரும்...)  


Saturday, April 3, 2010

என் (நம்) நண்பனுக்காக எழுதி முடிக்கப்பட வேண்டிய கடிதம்,... - 2 -


நேரம் எனது கடிகாரத்திலும், சென்னை சென்ட்ரல் கடிகாரத்திலும் சரியாக 09:30 என்று காட்டும் வேளையில் எனக்குள் ஒரு அதிர்வு. உடனே எனது நினைவு சுதாரித்து எனது அலைபேசி அடிக்கிறது என்று எனக்கு ஞாபகம் செய்தது. எடுத்து அலைபேசிக்கு  உயிர் கொடுத்த விநாடி மறுமுனையில் பிரசாந்த் பேசினான். 
"மச்சி, இப்பதான் வீட்டுல இருந்து கிளம்புறேன், இன்னும் ஒரு 20 நிமிசத்துல சென்ட்ரலுக்கு வந்துடுவேன்" என்று சொல்லி இணைப்பை துண்டித்தான். எனக்கு தெரியும் கண்டிப்பாக அண்ணாநகரில் இருந்து சென்ட்ரலுக்கு அதுவும் இந்த காலை போக்குவரத்தில் குறைந்தது அவன் வந்து சேர 40 நிமிடங்களாவது பிடித்துவிடும்.  சரி இன்னும் அரை மணி நேரம் என்ன செய்வது என்று நடந்து செல்கையில் சரவணபவன் முன் என் விழி படர்ந்தது. சரி, ஈரோடிருக்கு செல்ல எப்படியும் மாலை 5 மணி ஆகிவிடும் என்பதால் சிறிது சாப்பிடுவோம் என்று மாடி படிக்கட்டுகள் ஏறி உள்ளே நுழைந்தேன். பையா(Bayaa) ஏக் plate இட்லி என்று என் நுனி நாக்கு கூறும் வேளையில் தான் உணர்ந்தேன் நான் இருப்பது ஹைதராபாதில் அல்ல சென்னையில், உடனே சுதாரித்து "அண்ணே ஒரு plate இட்லி " என்று சொன்னேன். சரியாக 5 நிமிடங்களில் என் கண் முன் அழகான இட்லியுடன் மூவர்ண சட்னிகளும் வந்து என்னை  சாப்பிடு என தூண்டியது. 3 மாதங்கள் கழித்து தமிழ் இட்லி சாப்பிடுவதில் என்ன ஒரு சுகம். 
முடித்து விட்டு சென்ட்ரல் ஹாலில் காத்திருக்கும் போது என் தோள் மீது ஒரு கை விழுந்தது, திரும்பி பார்க்கையில் எனக்குள் மகிழ்ச்சி. சரியாக 2 வருடங்கள் கழித்து பிரசாந்தை பார்கிறேன். கொஞ்சம் வெள்ளையாக தெரிந்தான். ஆனால் இன்னும் அதே 50 - 55 கிலோவை தாண்டி வராமல் அவன் உடல் அடம் பிடித்து கொண்டு இருக்கிறது என்று எனக்கு தெரிந்தது. இருந்தாலும் அந்த ஒரு IT நிறுவனத்தில் வேலை பார்க்கும் professionalism அவனிடம் அழகாக தெரிந்தது. 

" டேய் எரும, எப்படி டா இருக்க?" என்று பேச்சை ஆரம்பித்தேன்.
"ஹ்ம்ம், நல்லா இருக்கேன் டா, இப்பதான் உனக்கு கண்ணு தெரிஞ்சுதா என்ன பார்க்கணும்னு ?"
"டேய் நீயே இப்பதான் மும்பையில இருந்து சென்னைக்கு போன வாரம் வந்த, பின்ன எப்படி உன்ன பார்ப்பது?"
"சரி, திடிருன்னு என்ன ஊருக்கு? அப்பா, அம்மா, தங்கச்சி எல்லாம் எப்படி இருக்காங்க?"
"எல்லாரும் நல்ல இருக்காங்க. சரி ஊருக்கு பொய் 4 மாசம் ஆச்சு, அதான், அதுவும் இல்லாம ஹைதராபாத் வெயில் தாங்க முடியுள, அதான் ஒரு வாரம் ஈரோடுக்கு போலாம்னு,"..
இப்படியே ஒரு 20 நிமிடங்கள்  அனைத்து விசாரிப்புகளும்  பேசி கொண்டே முதல் பிளாட்பாரம் வந்து சேர்ந்தோம். இன்னும் வெஸ்ட் கோஸ்ட் எடுக்க 1 மணி நேரம் இருந்தது. அவனிடம் பேசிய 20 நிமிடங்களில் நான் தான் ஒவ்வொரு முறையும் பேச்சை ஆரம்பித்தேன். அவனிடம் எப்போதும் நான் பார்க்கும் அந்த உற்சாகமும், சிரிப்பும்  மிகவும் குறைந்து இருந்தது. வழக்கமாக நிறைய பேசுவான். ஆனால் இப்போது அந்த வழக்கம் அவன் பழக்கத்தில் இல்லை போலும். மிகவும் அமைதியாகவே இருந்தான். என்னதான் பிரச்னை என்று கேட்கலாம் என்று கேட்டேன் ,
"என்னடா, கம்பனிக்கு ரொம்பே வேலை பார்ப்ப போலிருக்கு ரொம்பவும் டல்லா இருக்க"
"அப்படி எல்லாம் ஒன்னும்  இல்லடா, நல்லாத்தான் இருக்கேன்"
" சரி, இப்பதான் சென்னைக்கு வந்துட்டே, இப்பவாது அடிக்கடி பெங்களூர் போறியா?"
"பெங்களூர் ஆ? எதுக்கு ?"
(இந்த பதிலை நான் எதிர்பார்கவில்லை, எதோ பிரச்னை அவனுக்குள் கபடி ஆடி கொண்டு இருக்கிறது என்று நன்றாக தெரிந்தது.)
" என்னடா இப்படி கேக்குற? , திவ்யா எப்படி இருக்கா? "
(அவனிடம் இருந்து வந்த பதில் மௌனம்)
" என்னடா ஏதாவது பிரச்சனையா உங்களுக்குள?"
(இதற்கும் அவனது பதில் மௌனம்)
" டேய், உன்கிட்டதான் கேள்வி கேக்குறேன், ஏதாவது சொல்லுடா? , ஏதாவது சண்டையா உங்களுக்குள?, ஏதாவது சொல்லுடா?"
(மௌனம், மௌனம் , மௌனம் இதையே நான் அவனிடம் திவ்யாவை பற்றி கேட்ட அனைத்து கேள்விக்கும் அவன் அளித்த பதில் )
"என்னடா, இவன் கிட்ட போய் எதுக்கு சொல்லிட்டு இருக்குனும்னு நினைகிரியா?"
"டேய், உளறாத உன்னை போய் எப்படி நான் அப்படி நினைப்பேன்"
(ஒரு வழியாக, இந்த கேள்விக்கு வாய் திறந்தான்)
"அப்ப, என்ன பிரச்சனைன்னு சொல்லு டா?"
"ஒன்னும் இல்ல, சும்மா சண்டை எங்களுக்குள்ள"
"பொய், பெரிய பொய் , வேற எதோ பெரிய பிரச்னை, என்னனு சொல்ல போறியா இல்லையா, ஏன்டா இப்படி இருக்க, சொல்லுடா" என்று நான் பொது இடத்தில் இருப்பதை கூட அறியமால் கோபமாக கத்தினேன். 
"இப்ப என்ன உனக்கு தெரியனும், திவ்யாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு" 
(எனக்குள் அதிர்ச்சி, மிக பெரிய அதிர்ச்சி ,காரணம் இவர்கள் இருவரும் மற்ற காதலர்கள் போல் அல்ல, இவர்கள் காதல் எனக்கு ரொம்ப பிடிக்கும், அவ்வளவு அழகானது. அவர்கள் காதல் அவர்கள் இருவரையும் அவர்கள் வாழ்கையில் எவ்வளவு ஒரு நல்ல நிலைக்கு கொண்டு சென்றது என எனது நினைவில் இருந்த அனைத்து கடந்த கால சம்பவங்களையும் நினைக்க வைத்தது.) 
"என்னடா சொலுர, எனக்கு எதுவும் புரியல"
(அவன் குரலும், கைகளும் நடுங்கியது)
" டேய் பிரசாந்த், இவ்வளவு பெரிய பிரச்னை நடந்து இருக்கு, என்கிட்டே போன்'ல பேசும் போது ஒன்னும் சொல்லுல, ஏன்டா ? "
" டேய் என்னனு உன்கிட்டே சொல்ல சொலுர?"
" திவ்யா எப்படி டா இதுக்கு சமதிச்சா ?, நீ ஏன்டா போய் தடுக்குலே, அவங்க அப்பா, அம்மா தான் உனக்கு நல்ல பழக்கம் ஆச்சே, அவங்களுக்கு உன்ன நாள் தெரியும், அதுவும் இல்லாம அவங்க family 'ல நீயும் ஒருத்தர் போல தாண்டா இருந்த, பின்ன எப்படி? அவங்க அப்பா, அம்மா கிட்ட பேசி இருக்கலாம் தானே "
"ங்கோத்****...."

(அங்கிருந்த ரயில் அதிர்வை விட, இவன் கூறிய இந்த வார்த்தை என்னை அதிர வைத்தது. அதுவும் பிரசாந்த் வாயில் இருந்து வந்ததால். . காரணம் சிறு வயதில் இருந்தே ஒரு சின்ன கெட்ட வார்த்தை கூட பேசாதவன் அவன். அவனிடம் இருந்து இந்த வார்த்தை. நான் சற்றும் எதிர்பார்கவில்லை.   என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை, அவனை அணைத்து ஆறுதல் சொல்வது தவிர, என் தோளில் அவனது கண்ணீர் துளிகள்)
இன்னும் 5 நிமிடங்களில் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் 1 'ல் இருந்து புறப்பட தயாராக உள்ளது என்று என் காதில் அந்த செய்தி விழுந்தது.எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த சத்தமான இடத்திலும் பிரசாந்தின் மௌனம் எனக்கு தெளிவாக கேட்டது. பிரசாந்தை இப்படியே விட்டு  கிளம்ப என்னால் முடியவில்லை இருந்தாலும் இந்த ரயில்'ஐ விட்டால் நான் ஈரோடுக்கு செல்ல இரவுதான் ரயில் இருக்கிறது. ஒரே குழப்பம். இருந்தாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை. கிளம்பினேன் . . . பிரசாந்துடன் அவனது வண்டியில் கிளம்பினேன் . . . இன்று முழுவதும் அவனுடன் என் நேரத்தை செலவிட முடிவு செய்தேன்.

நேராக சென்ட்ரல் வெளியே வந்து அவனது பல்சர் 150 'யின் பின் இருக்கையை நான் ஆக்ரமித்து இருந்தேன். நேராக அண்ணாநகர் சென்றோம். அவனது வீட்டிற்கு. சுமார் 10 நிமிடங்கள் பைக் பயணத்தில் நாங்கள் இருவரும் பேசின வார்த்தைகள் "மௌனம்" . அவன் அவனது வண்டியில் DiscBrake அழுத்தி நிறுத்திய போது அவனது வீடு அழைத்தது. உள்ளே சென்று பிரசாந்தின் அப்பா, அம்மாவை சந்தித்து பேசினேன். இன்னும் அவர்களது பாசம் அப்படியே இருந்தது. ஒரு மணி நேரம் எங்களது நலம் விசாரிப்புகள், கடத்த கால நினைவுகளை பற்றி பேசினோம். பின்பு நானும் பிரசாந்தும் மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு நேராக கிளம்பிய இடம் பெசன்ட்நகர் பீச். சுமார்  3 மணி அளவில் பீச் மணலில் கால் வைத்தோம். பேசினோம், பேசினோம் நேரம் போவது தெரியாமல் பேசினோம். ஆனால் இந்த முறை அனைத்து விசயங்களையும் அவன்தான் பேசினான். மௌனமாக கேட்டு கொண்டே இருந்தேன். நடந்த அனைத்து விசயங்களையும் சொன்னான். பேசி முடித்து எனது கடிகாரத்தில் நேரம் பார்த்த போது மணி 7 . அந்த மாலை நேர சூரிய அஸ்தமனத்தையும், அழகையும் இப்போது என்னால் ரசிக்க முடியவில்லை. என் மனதிற்குள் நிறையே கோபம். பிரசாந்தை நினைத்து நிறைய வருத்தம். இவ்வாறு இப்போது என் மனதில் பிரசாந்தும் , அவனது திவ்யா மட்டும் தான் எனக்கு தெரிந்தார்கள். பிரசாந்தை விட இப்போது எனக்கு திவ்யாவை பற்றிய கவலைதான் அதிகமாக இருந்தது. 

இப்படியும் உலகத்தில் இந்த நவீன யுகத்தில் மக்கள் இருப்பார்களோ? என்று எனது கோபம் திவ்யாவின் வீட்டார் மீது திரும்பி இருந்தது. பிரசாந்திடம் பேச வார்த்தைகள் தீர்ந்து இருந்தது. அவன் மீது எனக்கு இப்போது இன்னும் அதிகமாக மரியாதை வந்து இருந்தது. அவனுக்கு நான் இப்போது என்ன செய்ய போகிறேன் என்று எனக்கு புரியவில்லை. யோசித்த கொண்டே இருக்கையில் தான் இரவு yercaud எக்ஸ்பிரஸ் ஞாபகம் வந்தது. பிரசாந்தை கூட்டி கொண்டு மறுபடியும் சென்னை சென்ட்ரல் சென்றேன் ஊருக்கு கிளம்ப. இப்போது என் மனதிற்குள் ஆயிரம் எண்ண ஓட்டங்கள். அனைத்தையும் மனதிற்குள் வைத்து கொண்டே பெசன்ட்நகர் பீச்சை விட்டு கிளம்பினோம்.
ரயில் நிலையத்தில் இறங்கிய பின்புதான் அந்த ஒரு எண்ணம் எனக்கு தோன்றியது. பிரசாந்திடம் கேட்கலாம் என்று எனக்கு பட்டது. அவனிடம் எனது Blog பற்றியும், அதில் கிடைக்கும் ரீச் பற்றியும் அவனிடம் கூறினேன். அவன் அந்த துக்கத்திலும் எனக்காக சந்தோஷபட்டான். அவனிடம், உன்னை பற்றியும், திவ்யா பற்றியும் எனது பர்சனல் ப்ளாகில் எழுத ஆசை படுவதாக கூறினான். அவனக்கு அதிர்ச்சி. நான் அவனிடம் அதற்கான காரணத்தை தெளிவு படுத்தினேன்.
"பிரசாந்த், நீ சொன்னது போல் திவ்யா பிரச்னை பற்றிய விஷயம் உனது கல்லூரி நண்பர்களுக்கு தெரியாது என்றாய். அவர்கள் அனைவரும் இப்போது திவ்யாவை பற்றி தவறாக நினைத்து கொண்டு இருப்பார்கள். அதை கண்டிப்பாக மாற்ற வேண்டும். அது மட்டும் இல்லாமல் உலகத்தில் இன்னும் இது போன்ற சம்பவங்கள் ஒரு பெண்ணுக்கு நடக்க கூடாது என்ற விசயமும் மக்களுக்கு தெரிய வேண்டும். அதற்காகத்தான் இந்த விசயத்தை பற்றி, உங்கள் அழகான காதல் பற்றி எழுத ஆசை படுகிறேன்." என்று கூறினேன்.
சிறிது நேரம் யோசித்து விட்டு சரி என்றான். அவனது சரி, ரயில் ஓட்டுனருக்கும் கேட்டிருக்கும் போல, yercaud எக்ஸ்பிரஸ் நகர ஆரம்பித்து விட்டது. பிரசாந்திடம், தைரியமாக இருக்க சொல்லி விட்டு கிளம்பினேன். நேராக எனது upper பெர்த்தில் ஏறி படுத்தேன். தூக்கம் வரவில்லை, வர போவதும் இல்லை என எனக்கு நன்றாக தெரிந்தது. எப்படி PRASANTH/DIVYA பற்றி blog 'இல் எழுதுவது என்று யோசித்து கொண்டே படுத்திருந்தேன். சட்டேன்று அந்த யோசனை தோன்றியது. பிரசாந்த் இதுவரை திவ்யாவின் அப்பா, அம்மாவிடம் கேட்க  நினைத்த விசயங்களை பிரசாந்தின் பார்வையில் கடிதமாக எழுதுலாம் என தோன்றியது. இதோ அடுத்த பதிவில் இருந்து கடிதம் ஆரம்பிக்க போகிறது. வைரவேலு அவர்களுக்கும், யமுனாதேவி அவர்களுக்கும் பிரசாந்த் எழுத போகிற கடிதம்.
(தொடரும்...)  




Wednesday, March 24, 2010

என் (நம்) நண்பனுக்காக எழுதி முடிக்கப்பட வேண்டிய கடிதம்,... - 1 -


இதோ, என் கடைசி பதிவில் நான் சொல்லி இருந்தது போல் கடந்த முறை நான் என் ஊருக்கு சென்று இருந்த போது என்னை மிகவும் பாதித்த விசயத்தை பற்றி இந்த பதிவில் எழுதுகிறேன்.  நான் வேலை பார்க்கும் Hyderbad'ல் இருந்து எனது சொந்த நகரமான ஈரோட்டிருக்கு செல்ல குறைந்தது 20 -22 மணி நேரங்களாவது பிடித்து விடும். எனவே பெரும்பாலும் நான் சென்னை சென்று, அங்கிருந்து ஈரோட்டிருக்கு செல்வதை வழக்கமாக்கி வைத்திருக்கிறேன். அதே போல் இந்த முறையும் அவ்வாறே செல்லாம் என முடிவு செய்தேன். பெரும்பாலும் ரயில் பயணங்களை அதிகம் விரும்புவேன். ரயிலில் அந்த ஜன்னல் ஓர காற்றும், படிக்கட்டு பயணங்களும், தனிமையின் சுவடுகளும் என்றும் நம் மனதில் பசுமையாக நிலைத்து இருக்கும். இந்த அனைத்து சுகங்களும் ஏனோ பேருந்து பயணங்களில் நான் உணருவதில்லை. எனவே இந்த முறையும் அவ்வாறே ஒரு வெள்ளிக்கிழமை இரவு Hyderbad'ல் இருந்து கிளம்பி சென்னைக்கு பயணித்தேன். என் மனதிற்குள் நிறைய எண்ண சிதறல்களுடன் எனது  இரவை ரயில் பயணம் விழுங்கி தமிழ் சூரியனை நோக்கி பயணித்து கொண்டிருந்தது. அடுத்த நாள் முழுவதும் எனது இருப்பிடம் சென்னையாக மாற போகிறது என்பதை உணராமல் எனது விழிகள் அயற ஆரம்பித்துவிட்டது.

காலையில் உதித்த போது சென்னை சென்ட்ரல் பல்லாயிரம் கால்களோடு சேர்த்து எனது கால்களுக்கும் சிவப்பு கம்பளம் விரித்து என்னையும் வரவேற்றது. பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் வீசும் காற்றில் தமிழ் மணத்தையும் சேர்த்து முகர்ந்தேன். நான் ஈரோட்டிருக்கு  செல்ல வேண்டிய வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் வர இன்னும் குறைந்தது 2 மணி நேரமாவது இருக்கும். அந்த 120 நொடிகளையும் எப்படி கழிப்பது என்ற யோசனையில் என் அனைத்து உடமைகளையும் எடுத்து கொண்டு சென்ட்ரலுக்கு உள்ளே செல்கையில் அங்கிருந்தே ஒரு கடையில் எழுதபட்டிருந்த வாசகத்தை பார்த்த போது அவனது ஞாபகம் வந்தது. அந்த வாசகம் பாரதியின் என்றும் அழியா கவிதைகளில் ஒன்று:
" தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரை போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? "
இதை வாசித்ததும் எனது மூலையில் உள்ள நினைவுகளை சில நொடி பொழுதில் தூசி தட்டி, என் வாழ்கையின் பக்கங்களை புரட்டி என் அன்பு தோழன் பிரசாந்தின் வீட்டை  நினைவுபடுத்தியது எனது மனம். 
காரணம் அவனது வீட்டின் முகப்பில் எழுத பட்டிருக்கும்  இந்த வாசகம். பாரதியாரின் நம்பர் 1 ரசிகன் அவன். ஒவ்வொரு முறையும் அவனது இல்லதிருக்கு செல்லும் போது அவனது அம்மாவையும் சேர்த்து என்னை வரவேற்பது இந்த வாசகம் தான். எனவே அவனையும் சரி, அவன்  இல்லத்தையும் சரி இந்த வாசகத்தை  சென்னை சென்ட்ரலில் பார்த்த போது ஞாபகம் படுத்தியது. பிரசாந்த்.. யார் இந்த பிரசாந்த்? என்று என் பல நண்பர்கள் இந்த பதிவை படிக்கும் போது கண்டிப்பாக அவர்களுக்குள் கேட்டு இருப்பார்கள். காரணம் இவன் எனது பள்ளியிலோ, எனது கல்லூரியிலோ என்னோடு சேர்ந்து படித்தவன் கிடையாது. எனது சில கல்லூரி நண்பர்களுக்கு இவனை  பற்றி தெரியும். காரணம் இவனது குடும்பமும், எனது குடும்பமும் கடந்த 14 வருடமாக பக்கத்துக்கு பக்க  வீட்டில் வசித்து வந்தோம்.  எங்களது நட்பும் சரி, அன்பும் சரி  இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அவனும் நானும் எங்களது நேரங்களை ஒன்றாக கழித்த காலங்கள் இன்னும் என் வாழ்வில் அழகான நினைவாக இருக்கிறது. நாங்கள் இருவரும் கல்லோரியிலாவது ஒன்றாக படிக்க வேண்டும் என்று எங்கள் பள்ளி நாட்களில் நினைத்து இருந்தோம். ஆனால் அதுவும் நடக்க வில்லை. வழக்கம் போல் பக்கத்துக்கு பக்க கல்லூரியில் படிக்க நேர்ந்தது. என்னை விடவும் மிகவும் நன்றாக படிக்கவும் , செயல் பட கூடியவன் பிரசாந்த்.  எனது கல்லூரி சம்பவங்களும் சரி, அவனது கல்லூரி  சம்பவங்களும் சரி எங்கள் இருவருக்கும் அத்துபடி. காரணம் தினமும் நாங்கள் கல்லூரி முடித்து விட்டு இரவு முழுக்க பேச வேற என்ன விஷயங்கள் இருக்கிறது?. அவன் அவனது பொறியியல் முன்றாவது வருடத்திலியே (என்னை போலவே) மென்பொருள் கம்பெனியில் தேர்வானான். அவனது கல்லூரி படிப்பு முடிந்ததுமே , அவனது மென்பொருள் கம்பெனி அவனை மும்பையில் வேலைக்கு அமர்த்தியது. அன்றில் இருந்து எங்கள் நட்பு அலைபேசியில் தொடர்ந்தது. தினமும் பேச முடியாவிட்டாலும், சனி, ஞாயிறுகளில் பேசி கொள்வோம்.

நான் சென்னைக்கு சென்றிந்த ஒரு வாரத்திற்க்கு முன்புதான் அவன் மும்பையில் இருந்து சென்னைக்கு மாற்றம் ஆகி வந்து இருந்தான். கடந்த 6   மாத காலமாக அவனுடன் பேசிய போது அவன் கொஞ்சம் வேலை இருக்கிறது, பின்பு அழைப்பதாக கூறுவான். ஆனால் அழைக்க மாட்டான். இது சனி, ஞாயிறுகளிலும் நடந்தது. பின்பு நான் அழைத்து பேசுவேன். அவனது பேச்சில் சில வருத்தங்கள் இருந்ததை என்னால் 6 மாதங்களாக   உணர முடிந்தது. பல முறை நான் கேட்டிருந்த போதும் அவன் சொன்ன ஒரே பதில் வேலை அதிகம். நானும் மென்பொருள் துறையில் இருப்பதால் அதை நம்ப  முடிந்தது. ஆனால் அவனது கடந்த 6 மாத கவலைக்கும் காரணம் அவனது வேலை பளு அல்ல என்பதும் அதற்கான உண்மையான காரணம் அவனிடம் நேரில் சென்னையில் பேசிய போதுதான் எனக்கு தெரிய வந்தது. அவனுடன் சென்னையில் நடந்த சந்திப்பு, என் முழு நாளும் சென்னையில் கழிந்த காரணம் என அனைத்து காரணங்களுக்கும் பதில் அடுத்த பதிவில்.
வேண்டும் என்றால் அவனது கவலைக்கான காரணத்தை மட்டும் கூறுகிறேன் அதற்கு காரணம் திவ்யா. அவனது திவ்யா.
தொடரும். . . கடிதத்திற்கான முன்னுரை தொடரும் . . .
(தொடரும்...)  





Tuesday, March 16, 2010

மனிதர்களுக்கும் வேண்டும் ரீ-சார்ஜ் !


ஹலோ, ஹலோ ..... அவ்வளவுதான் நமது மொபைலின் சார்ஜ் தீர்ந்து விட்டது. உடனே நாம் நமது மொபைலை ரீ-சார்ஜ் செய்து மறுபடியும் புத்துணர்ச்சி உடன் நமது பேச்சை தொடங்குவோம். உயிர் அற்ற நமது மொபைலுக்கே அவ்வபோது ரீ-சார்ஜ் தேவை படும் போது, காலம் நேரம் பார்க்காமல், பல்லாயிரம் கீ. மீ உறவுகளை தாண்டி வேலை செய்து வரும் நமக்கும் அவ்வபோது புத்துணர்ச்சி பெற ரீ-சார்ஜ் தேவை படுகிறது. இதோ நானும் கடந்த மாதத்தில் எனது ஊருக்கு சென்று ஒரு வாரம் தங்கி விட்டு புத்துணர்வுடன் மீண்டும் எனது வழக்கமான வேலைக்கு திரும்பி இருக்கிறேன். அதுவும் இந்த முறை நான் ஊருக்கு சென்ற போதும், கடந்த முறை ஊருக்கு சென்று வந்ததற்கும் நிறைய வித்தியாசங்கள், எனக்குள் நிறைய மாற்றங்கள். காலம் நம்மை கண்டிப்பாக மாற்றுகிறது, நம்மை மேலும் மேலும் வலுவாக்கிகிறது. இதோ  இந்த முறை நான் ஊருக்கு சென்று வந்ததில் இருந்து முக்கியமான முன்று நிகழ்வுகளை சொல்ல வேண்டும்.



 முதலாவதாக எனது நெருங்கிய தோழியின் திருமணம். பள்ளி ஆகட்டும், கல்லூரி ஆகட்டும் ஏன் இப்பொது நான் பணி புரியும் வேலை ஆகட்டும்.. எனது வாழ்வில் பெண் தோழிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவே. கண்டிப்பாக விரல் விட்டு எண்ணி விடலாம். சிறு வயதில் இருந்தே நான் அப்படிதான் இருந்து இருக்கிறேன். அத்தகைய ஒரு கல்லூரி தோழியின் திருமணதிற்கு சென்றேன். மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கும், விடிய காலை முகூர்ததிர்க்கும் சென்று அவளை வாழ்த்தி விட்டு வந்தேன். புதன், வியாழன் என்பதால் என்னவோ என் நண்பர்களின் வட்டத்தில் யாரும் வரவில்லை. மொத்தமே 5 - 6  நண்பர்கள்தான் வந்திருந்தார்கள். நான் என் வாழ்கையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கும், விடிய காலை முகூர்ததிர்க்கும் சென்ற முதல் (நண்பர்களின் வட்டத்தில்) திருமணம் இதுதான். கண்டிப்பாக அவளது  திருமணத்திருக்கு செல்ல வேண்டும் என நினைத்திருந்தேன், காரணம் கடந்த 6 மாததிருக்கு முன்பு நடந்த சில சம்பவங்களில் எனக்கு மிகவும் உதவியாக இருந்ததில் இவளும் ஒருவர். அவளது முகத்தில் இவ்வளவு வெட்கம் இருக்கிறது என்று அவளை மணமேடையில் பார்த்த போதுதான் தெரிந்தது. கல்லூரியில் இருந்தே அவள் மிகவும் துடிப்பு மிக்கவள், நன்றாகவும் படிக்ககுடியவள். Creative thinking என்பதை கல்லோரியிலே நிருபித்த அவள், அவளது திருமண பத்திரிகைளும் அவளது cretivity'ஐ காண்பித்து இருந்தாள். அவள், அவள் குடுமபத்துடன் நீண்ட நாட்கள் சந்தோசத்துடன் வாழ எனது வாழ்த்துகள். (அவள் சென்னையில் ஒரு மென்பொருள் டெஸ்டிங் (Bugs) கம்பெனியில் வேலை பார்த்து வருகிறாள்- அவளது பெயர் முந்தைய வரியில் இருக்கிறது.)



இரண்டாவது நிகழ்வு ஒரு புதிய நண்பனை சந்தித்தது. எனது பாச தோழனின், கல்லூரி தோழன் அவன். எனது ஊரில் இருந்து ஒரு 30 கீ.மீ தள்ளி இருக்கும் பவானியில் இருக்கிறது அவனது இல்லம். எங்களது சில வருங்கால திட்டங்களை பற்றி அவனிடம் பேசுமாறு எனது பாச தோழன் நான் ஊருக்கு செல்லும் போதே சொல்லி இருந்தான். எனவே நான் அவனது இல்லதிருக்கு என் கல்லூரி நண்பனுடன் சென்று இருந்தேன். அவனை பற்றி ஏற்கனேவே என் பாச தோழன் நிறைய சொல்லி இருக்கிறான். வாழ்கையில் சில நபர்களை பார்த்தவுடன் அந்த நபர்கள், நமக்கு நண்பர்கள் ஆகும் அளவிருக்கு சில விசயங்கள் நடக்கும். ஆனால் அவனுடன் பேசிய 1 - 2 மணி நேரங்களில் அவனும், அவனது கருத்துகளும் எனக்கு மிகவும் பிடித்து போயிற்று. அவனது சில உயர்ந்த எண்ணங்கள் எனக்கு ஆச்சிரியம் அளித்தது. "நண்பனின் நண்பன் நமக்கும் நண்பன்" என்ற வரிகளின் உண்மை அவனை பார்த்துவிட்டு வந்த போது எனக்கு புரிந்து இருந்தது. வருங்காலத்தில் அவனுடனும், என் பாச தோழனுடனும் சேர்ந்து செய்ய போகும் திட்டங்களை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன். Let's Rock Buddies.


முன்றாவதாக, கடந்த முறை நான் ஊருக்கு சென்ற சமயம் என் வாழ்வின் சில எதிர்பார்க்காத சம்பவங்கள் நடந்து இருந்தது. அதன் காரணமாக எனது அப்பா அம்மாவிற்கு நிறைய வலிகளையும், குழப்பத்தையும் தந்து இருந்தேன். எனவே இந்த முறை ஊருக்கு செல்லும் போதே கண்டிப்பாக அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும் என நினைத்து கொண்டேதான் சென்றேன். அதை பின்பற்றும் வகையில் ஊரில் இருந்த 10 நாட்களும் அவர்களுடேனே செலவளித்தேன். அவர்களிடம் நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டேன். அவர்களிடம் என் மேல் இருந்த அனைத்து குழப்பங்களையும் சரி செய்தேன். என்னால் முடிந்த வரை இந்த முறை அவர்களுக்கு சந்தோசம் அளித்தேன்.அவர்களால் நானும் சந்தோசம் பெற்றேன்.


இவை அனைத்தையும் விட முக்கியமான ஒரு  நிகழ்வு, என்னை மிகவும் யோசிக்கவும் பாதிக்கவும் செய்தது. அதை பற்றி அடுத்த பதிவில்...

Sunday, February 14, 2010

காதல் - நம் வாழ்கையை இயக்குகிறது...


இன்று ஆனந்த விகடனில் விஜய் டிவி கோபிநாத்தின் நீயும் நானும் கட்டுரையை படித்தேன். மிகவும் ரசிக்கவும், யோசிக்கவும் வைத்தது. ஒவ்வொருவரின் வாழ்கையிலும் காதல் எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது என்று சில பிரபலமானவர்களின் வாழ்கையை மேற்கோள் காட்டி எழுதி இருந்தார். சச்சின், நமது கிரிகெட் வாழ்கையின் பிதா மகன் என்றே கூறலாம். அவரது வாழ்கையில் காதல் எவ்வளவு அழகாக இருந்து இருக்கிறது, அந்த காதல் அவரை எவ்வளவு உயரமான சிகரத்தில் அவரை கொண்டு நிறுத்தி இருக்கிறது என்று அழகாக கூறி இருந்தார். சச்சின் நினைத்திருந்தால் அவரது வசதிக்கும், புகழக்கும் எவ்வளவு பெரிய பணக்கார குடும்பத்தில் இருந்தும் பெண்ணை மணந்து இருக்கலாம். ஆனால் தான் விமான நிலையத்தில் பார்த்த ஒரு பெண் அவரக்கு பிடித்து போகவே இருவரும் பேசி புரிந்து கொள்கிறார்கள். அவரின் மனதில் அஞ்சலி பதிந்த பிறகுதான், அஞ்சலி டாக்டர் என்றும், அவர் தன்னை விட வயதில் மூத்தவர் என்றும் தெரிய வருகிறது. அவர் இன்னும் சளைக்காமல், தடுமாறாமல் பல வெற்றி கனிகளை பறிக்கிறார் என்றால் அவரது உழைப்பையும் தாண்டி அவரது மனைவி அவர் மீது வைத்திருக்கும் காதல்தான் என்று அழகாக சொல்லி இருந்தார்.
இந்த கட்டுரையை படித்து முடித்தவுடன் என் மனதில் பல சம்பவங்கள் தோன்றின. கண் மூடி யோசித்தால் என் மனதிற்குள் ஆயிரம் ஆயிரம் நினைவுகள், உண்ர்ச்சிகள். அதில் சிலவற்றை பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்.. ஆயிரம் கீ.மீ தள்ளி இருந்தாலும் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு தடவையாவது என்னை தொலைப்பேசியில் அழைத்து, " இன்று உன் வேலை எப்படி சென்றது, சரியான நேரத்தில் சாப்டியா, அங்கே குளிர் அதிகமாக இருந்தால் ஸ்வெட்டர் போட்டுக்கோ, வெளிய இரவில் அதிக நேரம் சுற்றாத, உடம்ப பார்த்துக்கோ, பத்திரமா இரு" என்று இன்னும் இந்த 23 வயது வாலிபனை, குழந்தை போல் நினைத்து என்னை அன்போடு விசாரிக்கும் என் அம்மாவின், அப்பாவின் காதல் என்னை என் வாழ்கையில் கொண்டுசென்று இருக்கிறது. தொலைபேசியை வைத்தவுடன் தான் தெரிகிறது எனக்கும் அவர்களுக்கும் நடுவே 1000 கீ. மீ தூரம் எங்களை பிரித்து வைத்து இருக்கிறது என்று. அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பையும், காதலை நினைக்கும் போது, அவர்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பு நான் இந்த வார்த்தையை அடித்து கொண்டிருக்கும் என் மடிகணினியின் மீது நீர் துளியாக விழுகிறது.
பிறப்பாலும், வளர்ப்பாலும் வெவ்வாறு இருந்தாலும், எங்கோ பிறந்து, வளர்ந்து ஒவ்வொரு திசையில் இருந்து வந்து, மொழி தெரியாத, இது வரை வந்திராத ஒரு நகரில் ஒரே வீட்டில் 2 வருடங்களாக குடும்பம் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கும் என் நண்பர்களுக்கும் இடையேயான காதல் என்னை இந்த நேரத்தில் என்னை இந்த பதிவை எழுத வைக்கிறது.ஆணுக்கும், பெணுக்கும் இடையேயான உறவுகுத்தான் காதல் என்று பெயர் இல்லை. உலகில் உள்ள அனைத்து தூய்மையான உறவுக்கும் பெயர் காதல்தான். எனவேதான் சில வரிகளுக்கு முன்பு "எனக்கும் என் நண்பர்களுக்கும் இடையேயான காதல்" என்று எங்கள் நட்பை சொல்லி இருந்தேன். காலையில் அலாரம் அடிப்பது கூட தெரியாமல் தூங்கிவிட்டு பின்பு அடித்து பிடித்து எழுந்து,கிளம்பி குளியல் அறைக்கு சண்டை போட்டு கிளம்பும் போது மாப்பி வரேன், பாஸ் வரேன் என்று சொல்லி விட்டு விட்டில் இருந்து கிளம்பி வேலையே முடித்து விட்டு இரவு வீட்டிற்கு வந்து இரவு 12 அல்லது 1 மணி வரை உலக நியாயம் முதல் உள்ளூர் நியாயம் வரை அடித்து விட்டு தூங்க செல்லும் வரை ஒரு நாளின் 24 மணி நேரத்தில் குறைந்தது 18 மணி நேரம் அவர்களுடுந்தான் செலவிடிகறோம். எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்கள் காட்டும் அன்பு அல்லது காதல்தான் இன்னும் என்னை இந்த ஊரில் வாழ வைத்து கொண்டு இருக்கிறது. இந்த பதிவில் எனது அருமை நண்பர்களை பற்றி மேலோட்டமாகத்தான் சொல்லி உள்ளேன். அவர்களை பற்றியும், என் வாழ்வில் அவர்களது பங்கை பற்றியும் நிறைய எழுதலாம். விரைவில் தனி பதிவில் எழுதுகிறேன்.
மொத்தத்தில் என்னை மட்டும் அல்ல இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனயுமே அழகாக அவர்களது வாழ்கையில் தொய்வுராமல் கொண்டு செல்வது காதல்தான்.

Wednesday, February 10, 2010

DA 06 05 - I always Love IT...




வாழ்கையில் சில விஷயங்கள் போல் சில எண்களையும் நாம் என்றும் நம் நினைவில் வைத்திருப்போம். அந்த எண்கள் நமக்கு பிடித்தவரின் பிறந்த நாளாகவோ, நம் வாழ்வில் நடந்த சில நல்ல விசயங்களின் நாளாகவோ, இல்லை நமது அதிர்ஷ்ட எண்ணாகவோ இருக்ககூடும். அது போல் என் வாழ்கையில் நான் என்றும் மறக்க முடியாத எண் தான் இந்த DA 06 05 ... இந்நேரம் யூகித்து இருப்பிர்கள் இது ஒரு வாகனத்தின் எண் என்று. சரிதான்,.. இந்த பதிவில் இந்த எண்னை தன் பெயராக கொண்ட Pulsar 'ஐ பற்றி சிலவற்றை பகிர்ந்து கொள்ள போகிறேன். எதோ பொல்லாதவன் படத்தில் தனுஷ் போல் pulsar 'ஐ பற்றி ரொம்ப பேசுகிறேன் என்று யோசிகாதிர்கள். ஒவ்வொரு ஆணுக்கும் கண்டிப்பாக பைக் என்றால் கொஞ்சம் ஆசையாக இருக்கும், அதுக்கு நான் மட்டும் விதி விலக்கல. நான் முதன் முதலில் ஒரு பைக்கை நன்றாக கற்று கொண்டதும் இந்த DA 06 05 'ல் தான். 100 கி.மீ வேகத்தில் சென்றதும் இந்த DA 06 05 'ல் தான் .. இதை விட இந்த பைக் என் ஹைதராபாத் வாழ்கையில் என்னுடன் இன்னொரு நண்பன் போல் இருக்கிறது. என் கோபம், சிரிப்பு, அழுகை, வருத்தம் என என் பல உணர்சிகளை இந்த பைக் உணர்ந்து இருக்கிறது. நான் மிகவும் வேதனையாக இருந்த சில கடந்த கால நாள்களில் இவனுடன்(பைக்) தனியாக சென்ற நாட்கள் ஏராளம்.. இவனை எடுத்து கொண்டு யாருக்கும் தெரியாத திசைகளில் யாருக்கும் தெரியாமல் வெகு தூரம் சென்று இருக்கிறன். அந்த நாட்களில் எனக்கு ஆறுதலாக இருந்த சில நண்பர்களில் இவனும்( DA 06 05 )ஒருவன். Thats why i wrote this Post to mention him(06 05) and i can't forget him for my entire life. I Love It (Always)...

பின்க்குறிப்பு: உயிர் அல்லாத இந்த பைக்கை பற்றிய இவ்வளவு பேசும் நான், இந்த பைக்கின் உண்மையான சொந்தக்காரனை பற்றியும், என் பாசக்கார நண்பனைபற்றியும் பேசாமல் இருப்பேனா என்ன? உயிர் அல்லாத இந்த பைக்'கே என் வாழ்கையில் இவ்வளவு துணையாக இருக்கிறது என்றால் என் உயிரான என் நண்பன் எனக்கு எவ்வளவு துணையாக இருந்திருப்பான்.. அவனை பற்றி எழுத வார்த்தைகளை தேடி கொண்டு இருக்கிறேன்.. மிக விரைவில் எழுதுவேன்...

Sunday, February 7, 2010

Modern Youth's....



கால்களில் ரீபாக்,
கைகளில் ராடோ,
கண்ணில் ரே பான்,
தலை முடியில் செட் வெட்,
நறுமணத்திற்கு எக்ஸ்,
நோக்கியா / சோனி எரிக்ஸ்சொன் அலை பேசிகள்...
உடுத்தும் உடைகளில் பான் அமெரிக்கா / குரோகொடய்ல் / ஜாக்கி / ஒசேம்பெர்க்...
மடி கணிணியோ டெல் / ஹட்ச் பீ / எசேர் .....
இவை அனைத்தையும் சரியாக அழகாக எடுத்துக்கொண்டும், உடுத்திக்கொண்டும்
மென்பொருள் பொறியாளன் என சொல்லி கொண்டு
அயல் நாட்டு வங்கிக்கோ, தொழில் மணைக்கோ, இன்சூரன்ஸ் காபகத்துக்கோ மென்பொருள் செய்து கொடுத்து,
கே எப் சி / பிசா ஹுட்'லோ உணவு எடுத்து கொண்டு
ஆப்பிள் ஐ பாடில் இசை கேட்டு கொண்டும்
சாலையில் நடந்து செல்கையில் சாலை ஓர கடைகளையும், மனிதர்களையும் பார்த்து
ஏன் இன்னும் இந்தியா முன்னேறவில்லை? என கூறும் நமக்கு என்று
உண்மை உரைக்க போகிறது, இந்தியா ஏன் இன்னும் முன்னேறவில்லை என்று ????
"சிந்திப்போமாக"....

ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை!



*** Words from CBhagat in 2States ***
Love marriages around the world are simple:
Boy loves girl. Girl loves boy.
They get married.
In India, there are a few more steps:
Boy loves Girl. Girl loves Boy.
Girl's family has to love boy. Boy's family has to love girl.
Girl's Family has to love Boy's Family. Boy's family has to love girl's family.
Girl and Boy still love each other. They get married.

*** Words from Ivan***
In Southern part of India, there are few more steps:
Boy loves Girl. Girl loves Boy.
Girl's family has to love boy. Boy's family has to love girl.
Girl's Family has to love Boy's Family. Boy's family has to love girl's family.
And most importantly for God's Sake Both Family should be of same Caste and Religion..
Girl and Boy still love each other. They get married.

Who the F**k invented this F***ing System...

Why am I here?


"Somethings" in this world can't be separated from one's individual life and those are the things which fits into our day to day conversations and provides us to make moments in our life more lively and interesting.

For sure, each and every one lived/living/ will live with those things in your life. So here i am sharing those things which reflects in my life.

Since this entire world is only acts upon expressions, You can find some posts which will be helpful or some else informative or some else boring and so on expressions..

I am trying my best to keep your time valuable while you are in this blog...

There is a famous say: " Expressions and thoughts are more expressive only expressed in mother tongue(MT)" - As liable to this, you can find most of the thoughts reflecting here will be in my MT.

And damn i forgot to mention those "Somethings". Yep some of the somethings are;

Friends
Movies
Sports
Politics
and more....

Now Find and replace "Somethings" with above things and read this post once again....

Come on, Let's start....
Related Posts with Thumbnails