
நான் என்றும் மரியாதை செலுத்த வேண்டும் என்று நினைத்த திரு. வைரவேலு அவர்களுக்கும், திருமதி. யமுனாதேவி அவர்களுக்கும் எனது வணக்கங்கள்!
இந்த வரிகளை படிக்கும் போது உடனே உங்கள் மனதிருக்குள் தோன்றும் அந்த கேள்வி எனக்கு கேட்கிறது. ஆம், இந்த கடிதத்தை எழுதியது யார்? இது ஒன்றும் அவ்வளவு கஷ்டமான கேள்வி கிடையாது. உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து அறைகளும், உங்கள் வீட்டு மாடிபடிகளும் எனது பெயரை அழகாக எடுத்து சொல்லும். இந்த நேரம் யூகித்து இருப்பிர்கள் எனது பெயரை. ஆம் உங்கள் வாழ்கையில் நீங்கள் மிகவும் வெறுக்கும் நபராக இந்நேரம் உங்கள் மனதில் இருப்பவன் இந்த பிரசாந்தாகதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
முதலில் உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். எதற்கு என்று புரியவில்லையா, உங்களக்கு சில விஷயங்கள் என்றுமே புரியாததின் விளைவுதான் இந்த கடிதம். நீங்கள் மிகவும் சீரும், சிறப்புமாக வளர்த்த குழந்தைக்கு உலகமே வியக்கும் படி திருமணம் செய்து வைதிர்களே அதற்குதான் எனது வாழ்த்துகள். ஆம், திவ்யா எனக்கு என்றுமே குழந்தைதான். அந்த அழகிய குழந்தை தட்டுதடுமாறி இந்த உலகத்தை வெல்ல நினைத்த வேளையில் அதன் குழந்தைதனத்தையும், அதன் ஆசைகளையும் பொசுக்கி தள்ளியே உங்களுக்கு எனது வாழ்த்துகள்.
இதை பற்றி பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது என்று கேட்கிறிர்களா? எனக்கு இல்லாத அருகதை, அதுவும் திவ்யாவின் மேல் உள்ள அக்கறை இந்த உலகத்தில் வேறு எவனுக்கு இருக்கிறது. அதன் காரணமாகதான் இந்த கடிதம். சரி, திருமணம் ஆகி கிட்டதட்ட 6 மாதங்கள் முடிந்த பிறகு இந்த கடிதத்தை உங்களக்கு எழுதுவதன் நோக்கம் புரியவில்லையா?. இவ்வளவு நாள் என் மனதில் இருந்த காயங்கள், வழிகள், சோகம் அழுகை, கண்ணீர், கோபம் என்ற அனைத்தும் சிறிது காலத்தில் குறையும் என்று என் மனதின் உள்ளே அடக்கி வைத்திருந்தேன். ஆனால் காலங்கள் ஓடினாலும் எனது கோபம் இன்னும் அதிகம் ஆகி கொண்டுதான் போகிறதே தவிரே குறையவில்லை. அதை குறைக்கும் நோக்கத்தில்தான் இந்த கடிதத்தின் வாயிலாக நானும், திவ்யாவும் உங்கள் இருவரிடமும் எங்கள் காதலை உங்களிடம் வெளிபடுத்தும் போது கேட்க நினைத்த அனைத்தையும் இப்போது கேட்க போகிறேன். என்ன இப்போது திவ்யா என்னுடன் இல்லை, அவ்வளவுதான். இந்த எந்தவொரு கேள்விக்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, அந்த பதில்கள் எனக்கு தேவையும் இல்லை.

அடடா! உடனே நீங்கள் இந்த கேள்வியை கேட்பிர்கள் என்று எனக்கு நன்கு தெரியும். "உன்னை எவ்வளவு நம்பினோம், ஆனால் நீ எங்களக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டாய்". ஹ்ம். . நான் நம்பிக்கை துரோகம் செய்து விட்டேனா? எது நம்பிக்கை துரோகம்?
01 . நாங்கள் இருவரும் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைத்து தான் என்னை உங்கள் வீட்டிலும், திவ்யாவை எங்கள் வீட்டிலும் அனுமதிதிர்கள். அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நடுநிலமையான கல்லூரியில் படித்தாலும், ஒரு வகுப்பில் கிட்டதட்ட 70 பேர் இருந்தும், 4 வருட பொறியியல் படிப்பில் எந்தவொரு முறையும், அரியர்ஸ் வைக்காமல், அனைத்து முறையும் Distinction 'இல் தேர்வான 5 - 6 நபர்களில் உங்கள் திவ்யாவும், நானும் இருந்து இருக்கிறோம். இந்த விசயத்தில் உங்கள் நம்பிக்கையில் நாங்கள் குறை வைக்கவில்லை.
02 . ஒரு குழந்தை பிறந்து, வளரும் போது அதன் பெற்றோர்கள் அவர்கள் மீது வைக்கும் ஆசையும் சரி, நம்பிக்கையும் சரி என்ன தெரியுமா? நமது குழந்தை நன்கு படித்து, நல்ல வேலையில் சேர்ந்து கை நிறைய சம்பாரிக்க வேண்டும் என்பதே. அந்த நம்பிக்கையை மெய்படுத்துவது போல் அரியர்ஸ் வைக்காமல், அனைத்து முறையும் Distinction 'இல் தேர்வான இந்த பிரசாந்த்தும், திவ்யாவும் தங்கள் கல்லூரிக்கு வந்த முறையே முதலாவது, மட்டும் இரண்டாவது மென்பொருள் கம்பெனியில் தேர்வாகி 5 எண் இலக்கத்தில் சம்பளம் பெற்றோம். இதிலும் உங்கள் நம்பிக்கைக்கு நாங்கள் குறை வைத்து விட வில்லை.
இன்னும், இன்னும் என்னால் சொல்ல முடியும் ஆனால் அதை உங்களிடம் கூறி புரிய வைக்க இன்னும் யூகங்கள் ஆகும். உங்களக்கு என் மீது வெறுப்பு இருந்திருந்தால் என்னிடம் கண்டிப்பாக நீங்கள் பாசத்தையும், அன்பையும் பொழிந்திருக்க மாட்டிர்கள். என் திவ்யாவை நீங்கள் திருமணதிருக்கு கட்டாய படுத்திய சமயத்தில் அவள் என்னை பற்றியும், எங்கள் காதலை பற்றி கூறிய வேளையில் நீங்கள் முடியாது என சொல்லி வைத்த காரணம் இருக்கிறதே என்னை மிகவும் வேதனை படுத்தியது. "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாரதி பாடிய வார்த்தைகள் வெறும் பள்ளி புத்தகத்தில் மட்டும் தானே சரி என்ற உங்கள் வாதத்தின் முன்பு எப்படி எங்களது காதல் திவ்யாவின் வாழ்கை புத்தகத்தில் படியும். உலகம் எங்கேயோ போய் கொண்டிருக்கும் இந்த வேளையில் உங்களது வாதம் பிற்போக்காக இருந்தாலும், திவ்யாவின் பிடிவாதம் உங்களை முற்போக்காக மாற்றாததின் காரணம் என்னவோ? ஒருவேளை நீங்கள் இதுவரை பார்த்த காதலர்களில் இருந்து நாங்கள் மிகவும் வேறுபட்டு இருந்தோமே அதுவா? இல்லை, உங்கள் அனைத்து ஆசைகளையும் நினைவாக்கினோமே அதுவா ? இல்லை எங்களை பற்றியும், எங்களது காதலை பற்றியும் உங்களக்கு கடைசி வரையில் தெரியாமல் இருந்ததே அதுவா? இதோ எங்களது காதலின் காதல் பற்றியும், இதுவரை நீங்கள் கேட்டிராத சம்பவங்கள் பற்றியும் உங்களக்கு எடுத்து கூறும் நேரம் வந்து விட்டது. இதோ எங்களை பற்றி, நீங்கள் இதுவரை அறியாத திவ்யா, பிரசாந்தை பற்றி . . .
(தொடரும்...)





