ஹலோ, ஹலோ ..... அவ்வளவுதான் நமது மொபைலின் சார்ஜ் தீர்ந்து விட்டது. உடனே நாம் நமது மொபைலை ரீ-சார்ஜ் செய்து மறுபடியும் புத்துணர்ச்சி உடன் நமது பேச்சை தொடங்குவோம். உயிர் அற்ற நமது மொபைலுக்கே அவ்வபோது ரீ-சார்ஜ் தேவை படும் போது, காலம் நேரம் பார்க்காமல், பல்லாயிரம் கீ. மீ உறவுகளை தாண்டி வேலை செய்து வரும் நமக்கும் அவ்வபோது புத்துணர்ச்சி பெற ரீ-சார்ஜ் தேவை படுகிறது. இதோ நானும் கடந்த மாதத்தில் எனது ஊருக்கு சென்று ஒரு வாரம் தங்கி விட்டு புத்துணர்வுடன் மீண்டும் எனது வழக்கமான வேலைக்கு திரும்பி இருக்கிறேன். அதுவும் இந்த முறை நான் ஊருக்கு சென்ற போதும், கடந்த முறை ஊருக்கு சென்று வந்ததற்கும் நிறைய வித்தியாசங்கள், எனக்குள் நிறைய மாற்றங்கள். காலம் நம்மை கண்டிப்பாக மாற்றுகிறது, நம்மை மேலும் மேலும் வலுவாக்கிகிறது. இதோ இந்த முறை நான் ஊருக்கு சென்று வந்ததில் இருந்து முக்கியமான முன்று நிகழ்வுகளை சொல்ல வேண்டும்.
முதலாவதாக எனது நெருங்கிய தோழியின் திருமணம். பள்ளி ஆகட்டும், கல்லூரி ஆகட்டும் ஏன் இப்பொது நான் பணி புரியும் வேலை ஆகட்டும்.. எனது வாழ்வில் பெண் தோழிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவே. கண்டிப்பாக விரல் விட்டு எண்ணி விடலாம். சிறு வயதில் இருந்தே நான் அப்படிதான் இருந்து இருக்கிறேன். அத்தகைய ஒரு கல்லூரி தோழியின் திருமணதிற்கு சென்றேன். மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கும், விடிய காலை முகூர்ததிர்க்கும் சென்று அவளை வாழ்த்தி விட்டு வந்தேன். புதன், வியாழன் என்பதால் என்னவோ என் நண்பர்களின் வட்டத்தில் யாரும் வரவில்லை. மொத்தமே 5 - 6 நண்பர்கள்தான் வந்திருந்தார்கள். நான் என் வாழ்கையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கும், விடிய காலை முகூர்ததிர்க்கும் சென்ற முதல் (நண்பர்களின் வட்டத்தில்) திருமணம் இதுதான். கண்டிப்பாக அவளது திருமணத்திருக்கு செல்ல வேண்டும் என நினைத்திருந்தேன், காரணம் கடந்த 6 மாததிருக்கு முன்பு நடந்த சில சம்பவங்களில் எனக்கு மிகவும் உதவியாக இருந்ததில் இவளும் ஒருவர். அவளது முகத்தில் இவ்வளவு வெட்கம் இருக்கிறது என்று அவளை மணமேடையில் பார்த்த போதுதான் தெரிந்தது. கல்லூரியில் இருந்தே அவள் மிகவும் துடிப்பு மிக்கவள், நன்றாகவும் படிக்ககுடியவள். Creative thinking என்பதை கல்லோரியிலே நிருபித்த அவள், அவளது திருமண பத்திரிகைளும் அவளது cretivity'ஐ காண்பித்து இருந்தாள். அவள், அவள் குடுமபத்துடன் நீண்ட நாட்கள் சந்தோசத்துடன் வாழ எனது வாழ்த்துகள். (அவள் சென்னையில் ஒரு மென்பொருள் டெஸ்டிங் (Bugs) கம்பெனியில் வேலை பார்த்து வருகிறாள்- அவளது பெயர் முந்தைய வரியில் இருக்கிறது.)
இரண்டாவது நிகழ்வு ஒரு புதிய நண்பனை சந்தித்தது. எனது பாச தோழனின், கல்லூரி தோழன் அவன். எனது ஊரில் இருந்து ஒரு 30 கீ.மீ தள்ளி இருக்கும் பவானியில் இருக்கிறது அவனது இல்லம். எங்களது சில வருங்கால திட்டங்களை பற்றி அவனிடம் பேசுமாறு எனது பாச தோழன் நான் ஊருக்கு செல்லும் போதே சொல்லி இருந்தான். எனவே நான் அவனது இல்லதிருக்கு என் கல்லூரி நண்பனுடன் சென்று இருந்தேன். அவனை பற்றி ஏற்கனேவே என் பாச தோழன் நிறைய சொல்லி இருக்கிறான். வாழ்கையில் சில நபர்களை பார்த்தவுடன் அந்த நபர்கள், நமக்கு நண்பர்கள் ஆகும் அளவிருக்கு சில விசயங்கள் நடக்கும். ஆனால் அவனுடன் பேசிய 1 - 2 மணி நேரங்களில் அவனும், அவனது கருத்துகளும் எனக்கு மிகவும் பிடித்து போயிற்று. அவனது சில உயர்ந்த எண்ணங்கள் எனக்கு ஆச்சிரியம் அளித்தது. "நண்பனின் நண்பன் நமக்கும் நண்பன்" என்ற வரிகளின் உண்மை அவனை பார்த்துவிட்டு வந்த போது எனக்கு புரிந்து இருந்தது. வருங்காலத்தில் அவனுடனும், என் பாச தோழனுடனும் சேர்ந்து செய்ய போகும் திட்டங்களை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன். Let's Rock Buddies.
முன்றாவதாக, கடந்த முறை நான் ஊருக்கு சென்ற சமயம் என் வாழ்வின் சில எதிர்பார்க்காத சம்பவங்கள் நடந்து இருந்தது. அதன் காரணமாக எனது அப்பா அம்மாவிற்கு நிறைய வலிகளையும், குழப்பத்தையும் தந்து இருந்தேன். எனவே இந்த முறை ஊருக்கு செல்லும் போதே கண்டிப்பாக அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும் என நினைத்து கொண்டேதான் சென்றேன். அதை பின்பற்றும் வகையில் ஊரில் இருந்த 10 நாட்களும் அவர்களுடேனே செலவளித்தேன். அவர்களிடம் நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டேன். அவர்களிடம் என் மேல் இருந்த அனைத்து குழப்பங்களையும் சரி செய்தேன். என்னால் முடிந்த வரை இந்த முறை அவர்களுக்கு சந்தோசம் அளித்தேன்.அவர்களால் நானும் சந்தோசம் பெற்றேன்.
இவை அனைத்தையும் விட முக்கியமான ஒரு நிகழ்வு, என்னை மிகவும் யோசிக்கவும் பாதிக்கவும் செய்தது. அதை பற்றி அடுத்த பதிவில்...




