இதோ, என் கடைசி பதிவில் நான் சொல்லி இருந்தது போல் கடந்த முறை நான் என் ஊருக்கு சென்று இருந்த போது என்னை மிகவும் பாதித்த விசயத்தை பற்றி இந்த பதிவில் எழுதுகிறேன். நான் வேலை பார்க்கும் Hyderbad'ல் இருந்து எனது சொந்த நகரமான ஈரோட்டிருக்கு செல்ல குறைந்தது 20 -22 மணி நேரங்களாவது பிடித்து விடும். எனவே பெரும்பாலும் நான் சென்னை சென்று, அங்கிருந்து ஈரோட்டிருக்கு செல்வதை வழக்கமாக்கி வைத்திருக்கிறேன். அதே போல் இந்த முறையும் அவ்வாறே செல்லாம் என முடிவு செய்தேன். பெரும்பாலும் ரயில் பயணங்களை அதிகம் விரும்புவேன். ரயிலில் அந்த ஜன்னல் ஓர காற்றும், படிக்கட்டு பயணங்களும், தனிமையின் சுவடுகளும் என்றும் நம் மனதில் பசுமையாக நிலைத்து இருக்கும். இந்த அனைத்து சுகங்களும் ஏனோ பேருந்து பயணங்களில் நான் உணருவதில்லை. எனவே இந்த முறையும் அவ்வாறே ஒரு வெள்ளிக்கிழமை இரவு Hyderbad'ல் இருந்து கிளம்பி சென்னைக்கு பயணித்தேன். என் மனதிற்குள் நிறைய எண்ண சிதறல்களுடன் எனது இரவை ரயில் பயணம் விழுங்கி தமிழ் சூரியனை நோக்கி பயணித்து கொண்டிருந்தது. அடுத்த நாள் முழுவதும் எனது இருப்பிடம் சென்னையாக மாற போகிறது என்பதை உணராமல் எனது விழிகள் அயற ஆரம்பித்துவிட்டது.
காலையில் உதித்த போது சென்னை சென்ட்ரல் பல்லாயிரம் கால்களோடு சேர்த்து எனது கால்களுக்கும் சிவப்பு கம்பளம் விரித்து என்னையும் வரவேற்றது. பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் வீசும் காற்றில் தமிழ் மணத்தையும் சேர்த்து முகர்ந்தேன். நான் ஈரோட்டிருக்கு செல்ல வேண்டிய வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் வர இன்னும் குறைந்தது 2 மணி நேரமாவது இருக்கும். அந்த 120 நொடிகளையும் எப்படி கழிப்பது என்ற யோசனையில் என் அனைத்து உடமைகளையும் எடுத்து கொண்டு சென்ட்ரலுக்கு உள்ளே செல்கையில் அங்கிருந்தே ஒரு கடையில் எழுதபட்டிருந்த வாசகத்தை பார்த்த போது அவனது ஞாபகம் வந்தது. அந்த வாசகம் பாரதியின் என்றும் அழியா கவிதைகளில் ஒன்று:
" தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரை போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? "
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரை போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? "
இதை வாசித்ததும் எனது மூலையில் உள்ள நினைவுகளை சில நொடி பொழுதில் தூசி தட்டி, என் வாழ்கையின் பக்கங்களை புரட்டி என் அன்பு தோழன் பிரசாந்தின் வீட்டை நினைவுபடுத்தியது எனது மனம்.
காரணம் அவனது வீட்டின் முகப்பில் எழுத பட்டிருக்கும் இந்த வாசகம். பாரதியாரின் நம்பர் 1 ரசிகன் அவன். ஒவ்வொரு முறையும் அவனது இல்லதிருக்கு செல்லும் போது அவனது அம்மாவையும் சேர்த்து என்னை வரவேற்பது இந்த வாசகம் தான். எனவே அவனையும் சரி, அவன் இல்லத்தையும் சரி இந்த வாசகத்தை சென்னை சென்ட்ரலில் பார்த்த போது ஞாபகம் படுத்தியது. பிரசாந்த்.. யார் இந்த பிரசாந்த்? என்று என் பல நண்பர்கள் இந்த பதிவை படிக்கும் போது கண்டிப்பாக அவர்களுக்குள் கேட்டு இருப்பார்கள். காரணம் இவன் எனது பள்ளியிலோ, எனது கல்லூரியிலோ என்னோடு சேர்ந்து படித்தவன் கிடையாது. எனது சில கல்லூரி நண்பர்களுக்கு இவனை பற்றி தெரியும். காரணம் இவனது குடும்பமும், எனது குடும்பமும் கடந்த 14 வருடமாக பக்கத்துக்கு பக்க வீட்டில் வசித்து வந்தோம். எங்களது நட்பும் சரி, அன்பும் சரி இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அவனும் நானும் எங்களது நேரங்களை ஒன்றாக கழித்த காலங்கள் இன்னும் என் வாழ்வில் அழகான நினைவாக இருக்கிறது. நாங்கள் இருவரும் கல்லோரியிலாவது ஒன்றாக படிக்க வேண்டும் என்று எங்கள் பள்ளி நாட்களில் நினைத்து இருந்தோம். ஆனால் அதுவும் நடக்க வில்லை. வழக்கம் போல் பக்கத்துக்கு பக்க கல்லூரியில் படிக்க நேர்ந்தது. என்னை விடவும் மிகவும் நன்றாக படிக்கவும் , செயல் பட கூடியவன் பிரசாந்த். எனது கல்லூரி சம்பவங்களும் சரி, அவனது கல்லூரி சம்பவங்களும் சரி எங்கள் இருவருக்கும் அத்துபடி. காரணம் தினமும் நாங்கள் கல்லூரி முடித்து விட்டு இரவு முழுக்க பேச வேற என்ன விஷயங்கள் இருக்கிறது?. அவன் அவனது பொறியியல் முன்றாவது வருடத்திலியே (என்னை போலவே) மென்பொருள் கம்பெனியில் தேர்வானான். அவனது கல்லூரி படிப்பு முடிந்ததுமே , அவனது மென்பொருள் கம்பெனி அவனை மும்பையில் வேலைக்கு அமர்த்தியது. அன்றில் இருந்து எங்கள் நட்பு அலைபேசியில் தொடர்ந்தது. தினமும் பேச முடியாவிட்டாலும், சனி, ஞாயிறுகளில் பேசி கொள்வோம்.
நான் சென்னைக்கு சென்றிந்த ஒரு வாரத்திற்க்கு முன்புதான் அவன் மும்பையில் இருந்து சென்னைக்கு மாற்றம் ஆகி வந்து இருந்தான். கடந்த 6 மாத காலமாக அவனுடன் பேசிய போது அவன் கொஞ்சம் வேலை இருக்கிறது, பின்பு அழைப்பதாக கூறுவான். ஆனால் அழைக்க மாட்டான். இது சனி, ஞாயிறுகளிலும் நடந்தது. பின்பு நான் அழைத்து பேசுவேன். அவனது பேச்சில் சில வருத்தங்கள் இருந்ததை என்னால் 6 மாதங்களாக உணர முடிந்தது. பல முறை நான் கேட்டிருந்த போதும் அவன் சொன்ன ஒரே பதில் வேலை அதிகம். நானும் மென்பொருள் துறையில் இருப்பதால் அதை நம்ப முடிந்தது. ஆனால் அவனது கடந்த 6 மாத கவலைக்கும் காரணம் அவனது வேலை பளு அல்ல என்பதும் அதற்கான உண்மையான காரணம் அவனிடம் நேரில் சென்னையில் பேசிய போதுதான் எனக்கு தெரிய வந்தது. அவனுடன் சென்னையில் நடந்த சந்திப்பு, என் முழு நாளும் சென்னையில் கழிந்த காரணம் என அனைத்து காரணங்களுக்கும் பதில் அடுத்த பதிவில்.
வேண்டும் என்றால் அவனது கவலைக்கான காரணத்தை மட்டும் கூறுகிறேன் அதற்கு காரணம் திவ்யா. அவனது திவ்யா.
தொடரும். . . கடிதத்திற்கான முன்னுரை தொடரும் . . .
(தொடரும்...)